TN Assembly Election| தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
TN Assembly Election| தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், தி.மு.க., வேட்பாளர்கள் நேர்காணலை ஒருமறுபுறமும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை மறுபுறமும் என மும்முரமாக பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணியினர் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எண்ணிக்கை விவரம்:-

காங்கிரஸ்- 28

மதிமுக- 4

ஐயூஎம்எல்- 2

மனிதநேய மக்கள் கட்சி-2

கொ.ம.தே.க.-2

இந்திய கம்யூனிஸ்ட்-5

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com