

சென்னையில் வரும் 23ஆம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் (23.03.2026] திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.