TVK Vijay| தமிழகம் முழுவதும் த.வெ.க.வுக்கு தாவ தயாராகும் காங்கிரஸ் அதிருப்தி நிர்வாகிகள்

சிலர் புதுவையில் வாய்ப்பு கொடுத்தது போல் தமிழ்நாட்டிலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்கள்.
TVK Vijay| தமிழகம் முழுவதும் த.வெ.க.வுக்கு தாவ தயாராகும் காங்கிரஸ் அதிருப்தி நிர்வாகிகள்
Published on

தேர்தல் காலங்களில் அதிரடி திருப்பங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பது சகஜம். அந்த வகையில் புதுவை அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பா.ஜனதா எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. முன்னாள் பா.ஜனதா மாநில தலைவர், முன்னாள் அ.தி.மு.க. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சிகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக த.வெ.க.வில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

அண்டை மாநிலமான புதுவையில் நடந்த அதிரடி திருப்பங்கள் போல் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கான சூழல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் நீண்டகாலமாக தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. ஆனால் தி.மு.க.வில் உரிய மரியாதை தருவதில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும். கூடுதல் தொகுதிகளையும் பெற வேண்டும் என்ற கோஷம் காங்கிரசுக்குள் வலுத்தது. அதற்கு முக்கிய காரணம் தேர்தல் களத்துக்கு புதிதாக வந்த த.வெ.க.தான்.

தி.மு.க. கூட்டணி ஒத்து வராத பட்சத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரசில் ஒரு கோஷ்டி தீவிரமாக காய் நகர்த்தியது.

ஒரு கட்டத்தில் பழம் நழுவி பாலில் விழும் கதையாக த.வெ.க.- காங்கிரஸ் கூட்டணி ஏற்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி கட்டத்தில் தி.மு.க. கூட்டணியை விரும்பும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இணைந்து அந்த திட்டத்தை முறியடித்து தி.மு.க. கூட்டணியிலேயே காங்கிரசை நீடிக்க வைத்தனர். கடந்த தேர்தலைவிட காங்கிரசுக்கு 3 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

இருப்பினும் காங்கிரசில் ஒரு பிரிவினர் அதிருப்தியிலேயே இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரசில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர் பதவி கிடைக்காதவர்கள் உள்பட பல நிர்வாகிகள் த.வெ.க.வினரை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். அதில் சிலர் புதுவையில் வாய்ப்பு கொடுத்தது போல் தமிழ்நாட்டிலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்கள்.

ஆனால் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளார்கள். சென்னையில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் வட சென்னையில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால் அவர் கேட்ட தொகுதிகள் மீனவர்கள் நிறைந்த பகுதி என்பதால் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கப்போவதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டனர். அந்த தொகுதிகளில் மெஜாரிட்டியாக வாழும் சமூகம், எதிரணியினருக்கு ஓரளவு ஈடுகொடுத்து தேர்தல் செலவுகளை சமாளிக்கும் தகுதி, விஜய்யுடன் பல ஆண்டுகளாக பயணிக்கும் சாதாரண தொண்டர்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார்கள்.

இதனால் காங்கிரசில் இருந்து வாய்ப்பு கேட்ட சிலருக்கு வாய்ப்பு வழங்க இயலாத நிலையை த.வெ.க. தரப்பில் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் இருக்கிறார்கள். அந்த 17 தொகுதிகளையும் காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளனர். அதே தொகுதிகள் கிடைத்தாலும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது சந்தேகம்.

அவ்வாறு வாய்ப்பு கிடைக்காதவர்களும் த.வெ. க.வுக்கு செல்ல தயாராகி வருவதாக கூறப்ப டுகிறது. இந்த சூழ்நிலையில் கட்சியில் இருந்து விலகி செல்பவர் களை தடுக்க மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு உள்ளார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com