டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை: விசாரணை நடத்த தலைவர்கள் கோரிக்கை

டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. இரங்கல் தெரிவித்துள்ளார்.விஜயகுமார் ஐ.பி.எஸ். தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டும்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை: விசாரணை நடத்த தலைவர்கள் கோரிக்கை
Published on

சென்னை:

கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி. இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த விஜயகுமார் பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

ஆகவே, விஜயகுமார் ஐ.பி.எஸ். தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்ன ணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்து கிறேன்.

பா.ம.க.நிறுவனர் ராமதாஸ்:-

போலீஸ் அதிகாரி விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை. அவரது மன அழுத்தத்திற்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.

காவல்துறை அதிகாரி விஜயகுமாரின் தற்கொலையை அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன? என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க பா.ம.க. சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com