

தமிழகத்தில் 5 மண்டலங்களில் மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
அதன் எண்ணிக்கை விவரம் மணடலம் வாரி யாக வருமாறு:-
சென்னை மண்டலத்தில் சென்னை தெற்கில் 14-ம், வடக்கில் 18-ம், மத்தியில் 15-ம், காஞ்சீபுரம் வடக்கில் 12-ம், தெற்கில் 7-ம், திருவள்ளூர் மேற்கில் 4-ம், கிழக்கில் 29-ம் என 99 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
கோவை மண்டலத்தில் கரூரில் 8-ம், நீலகிரியில் 27-ம், கோவை தெற்கில் 21-ம், வடக்கில் 48-ம், ஈரோட்டில் 39-ம், திருப்பூரில் 30-ம் என 173 டாஸ்மாக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல மதுரை மண்டலத்தில் மதுரை வடக்கில் 13-ம், சிவகங்கையில் 18-ம், கன்னியாகுமரியில் 18-ம், நெல்லையில் 33-ம், தூத்துக்குடியில் 63-ம், மதுரை தெற்கில் 32-ம், விருதுநகரில் 37-ம், ராமநாதபுரத்தில் 29-ம், திண்டுக்கல்லில் 26-ம் என 281 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.
சேலம் மண்டலத்தில் வேலூரில் 6-ம், தர்மபுரியில் 7-ம், கிருஷ்ணகிரியில் 6-ம், அரக்கோணத்தில் 7-ம், திருவண்ணாமலையில் 20-ம், சேலத்தில் 20-ம், நாமக்கல்லில் 14-ம் என 80 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
திருச்சி மண்டலத்தில் தஞ்சாவூரில் 6-ம், பெரம்பலூரில் 5-ம், திருவாரூரில் 5-ம், விழுப்புரத்தில் 11-ம், நாகப்பட்டினத்தில் 4-ம், திருச்சியில் 16-ம், கடலூரில் 21-ம், புதுக்கோட்டையில் 16-ம் என 84 டாஸ்மாக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.