முதலமைச்சரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

துறை ரீதியான சந்திப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் விதமாக தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
Published on

முதலமைச்சர் விஜயின் தனி செயலாளர்கள் செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துறை ரீதியான சந்திப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் விதமாக தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செந்தில்குமாருக்கு நிதித்துறை, மதுவிலக்கு, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, விஜிலன்ஸ் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

லட்சுமி பிரியாவுக்கு சுற்றுச்சூழல், பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை, வனத்துறை, வீட்டு வசதித்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாதுரைக்கு இயற்கை வளங்கள், நீர்வளத்துறை, வேளாண்மை, கால்நடை, போக்குவரத்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விஷ்ணுவுக்கு வணிக வரித்துறை, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு மேம்பாட்டு துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com