

தமிழக வெற்றிக்கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திமுக கூட்டணி 73 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதில் காங்கிரஸ் 5, விசிக 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, முஸ்லீம் லீக் 2, தேமுதிக 1 இடங்களை கொண்டுள்ளது.
விஜயின் தவெக ஆட்சி அமைக்க 118 இடங்களே என்பதே பெரும்பான்மை என்பதால் அதற்கு 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தால் ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு, விஜய், ஆட்சி அமைக்க அழைக்க கோரியும், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் கோரியும் கடிதம் எழுதியுள்ளார்.
கூட்டணிக்கு காங்கிரஸ் உடன் தவெக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து டெல்லி தலைமை தான் முடிவெடுக்கும். ராகுல் காந்தி முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.
முன்னதாக அவர் கூட்டணி கட்சியினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் காங்கிரஸ் பங்கேறக்காதது பேசுபொருளாகியுள்ளது.