TN Assembly Election | சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் தொகுதி மாறி போட்டியிடவுள்ளனர்.
CV Shanmugam and KT Rajendra Balaji
CV Shanmugam and KT Rajendra Balaji
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அதில் முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய 23 பேர் கொண்ட முதற்பட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் தொகுதி மாறி போட்டியிடவுள்ளனர்.

அதாவது கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய சி.வி.சண்முகம் இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதே போல், கடந்த முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய கே.டி.ராஜேந்திரபாலாஜி இந்த முறை சிவகாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார்

X

Maalai Malar
www.maalaimalar.com