தொடரும் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா: ‘வாக்காளர்களை அவமதிக்கும் செயல்’ - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
தொடரும் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா: ‘வாக்காளர்களை அவமதிக்கும் செயல்’ - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்
Published on: 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி முழுதாக 2 மாதங்கள் கூட முடியாத நிலையில், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

மேலும் இதில் 4 பேர் ஆட்சியமைத்துள்ள தவெகவில் ஐக்கியமாகிய நிலையில், இருவர் விரைவில் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காரணம் இல்லாமல், வெறும் பதவிக்காக மட்டும் நிகழும் இந்த தொடர் ராஜினாமாக்களுக்கு பிற அரசியல் கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இந்த நடைமுறை குறித்து விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,.

“எந்தவித விளக்கமும் இன்றி அவ்வப்போது நடைபெறும் ராஜினாமாக்கள், வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com