தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு - அன்புமணி கொடுத்த ரியாக்ஷன்

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு காங்கிரஸ் முழு ஆதரவை அளித்துள்ளது.
தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு - அன்புமணி கொடுத்த ரியாக்ஷன்
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியவற்றின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைப்பதற்கு காங்கிரஸ் முழு ஆதரவை அளித்துள்ளது.

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விஜயை சந்தித்தனர். அப்போது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை தவெக தலைவர் விஜயிடம் வழங்கினர். இதையடுத்து தவெக பலம் 113 ஆக உயர்ந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட் பாமக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், பனையூரில் காரில் புறப்பட்டு சென்ற பாமக தலைவர் அன்புமணியிடம், 'தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?' என்று செய்தியாளர்கள் கேள்விக்கு எழுப்பினர்.

அதற்கு, புன்னகைத்தபடியே வணக்கம், நன்றி என கூறிவிட்டு அவர் புறப்பட்டு சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com