சீமான் குடும்பத்தில் புதிய வரவு - பெண்குழந்தைக்கு தந்தையானார் நாதக தலைவர்!

கடந்த 2013ஆம் ஆண்டு சீமானிற்கு திருமணம் நடைபெற்றது.
சீமான் குடும்பத்தில் புதிய வரவு - பெண்குழந்தைக்கு தந்தையானார் நாதக தலைவர்!
Published on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கயல்விழி தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண்குழந்தை பிறந்துள்ளது.

சீமான் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகரான மறைந்த கே. காளிமுத்துவின் மகள் கயல்விழி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இன்று இந்த தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண்குழந்தை பிறந்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளில் போட்டியிட்ட நாதக, ஒரு தொகுதியைகூட வெல்லாதநிலையில், கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் வாக்கு சதவீதமும் குறைந்திருந்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com