

17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-வது நாள் நிகழ்வு தொடங்கியது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்த்தாய் வாழ்த்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்துள்ளோம்.
* எக்காரணத்தை கொண்டும் மாநில உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம்.
* நீட் தேர்வு கூடாது என மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.
* தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
* கண்ணை மூடி கொண்டு மத்திய அரசை எதிர்ப்பது தவெகவின் கொள்கை அல்ல.
* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
* தமிழக வெற்றிக்கழகம் யாருடைய டீமும் அல்ல, மக்களுடைய டீம்.
* சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
* பெண்கள் பாதுகாப்பிற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் கடந்த மே மாதம் தான் உருவானது போல் பேசுகிறார்கள்.
* தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக சட்டம் ஒழுங்கு டிஜிபி இல்லாமல் இருந்தது.
* சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவது அக்கறை அல்ல அவதூறு அரசியலாகவே தெரிகிறது.
* சட்டம் ஒழுங்கு தொடர்பாக யாருக்கு என்ன ஆலோசனைகள் இருந்தாலும் கூறலாம்.
* ஊழலில் இருந்து தப்பிப்பது தான் நிர்வாக திறன் என்றால் அதனை த.வெ.க. அரசு செய்யாது.
* இது மன்னராட்சி அல்ல மனசாட்சி உள்ள மக்களாட்சி, விமர்சனம் செய்ய எல்லாருக்கும் எல்லா உரிமையும் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.