சட்டசபையில் அனைவரும் சமம்- முதலமைச்சர் விஜய் பேச்சு

அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மதிக்கும் பண்பு பேரவையில் காக்கப்பட வேண்டும் என்றார்.
சட்டசபையில் அனைவரும் சமம்- முதலமைச்சர் விஜய் பேச்சு
Published on

சபாநாயகரை இருக்கையில் அமர வைக்கும் பின்னணி வரலாறு குறித்து சட்டசபையில் குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் பேசினார். அவர் பேசியதாவது:-

* சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக, செம்மையாக நடைபெற வேண்டும்.

* சட்டசபையில் அனைவரும் சமம். ஒரு கட்சியில் ஒரு உறுப்பினர் இருந்தாலும் அவரது கருத்துக்கும் மதிப்பளிக்கப்படும்.

* சபாநாயகர், துணை சபாநாயகர் இருவரும் சாதாரண குடும்பத்தில் பிறந்து மக்கள் பணியாற்றும் ஆர்வத்தில் வந்தவர்கள்.

* மக்களின் எதிர்பார்ப்புகளை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு சட்டசபைக்கு உள்ளது.

* ஒரு உறுப்பினரே உள்ள கட்சியின் குரலுக்கும் பேரவையில் முக்கியத்தும் வழங்கப்படும்.

* சிறிய கட்சி, பெரிய கட்சி என இல்லாமல் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களின் குரலுக்கும் மதிப்பளிக்கப்ழுடும்.

* பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் காக்கும் பொறுப்பு சபாநாயகருடையது.

* சட்டசபையில் அனைவரும் சமம்தான். நல்லவை ஏற்கப்பட்டு அல்லவை நிராகரிக்கப்படும்.

* அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மதிக்கும் பண்பு பேரவையில் காக்கப்பட வேண்டும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com