சமூக நீதி துறை- முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை

ஆவண படுகொலைக்கு எதிராக தனி சட்டம் உள்ளிட்டவை பற்றியும், வீட்டுமனை பட்டா இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்தும் முதலமைச்சர் விஜய் விரிவாக ஆலோசித்தார்.
முதலமைச்சர் விஜய்
Published on

தமிழக சட்டசபையில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் நாள்தோறும் அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று தலைமைச் செயலகத்தில் சமூக நீதித்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

சமூக நீதி துறை

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் சமூக நீதி விடுதி மாணவர்களின் உணவுப்படியே உயர்த்துவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் ஆவண படுகொலைக்கு எதிராக தனி சட்டம் உள்ளிட்டவை பற்றியும், வீட்டுமனை பட்டா இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்தும் முதலமைச்சர் விஜய் விரிவாக ஆலோசித்தார்.

இதில் துறையின் அமைச்சர் வன்னி அரசு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com