என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி தான் அமையும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மத்திய அரசால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிறது.
- அரசியலில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த ப.சிதம்பரத்தின் பாராட்டை முக்கியமானதாக கருதுகிறேன்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து காரைக்குடி கழனிவாசலில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.2.559.50 கோடி மதிப்புள்ள 49 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.13.36 கோடி மதிப்புள்ள 28 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது:
* பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரிகம் ஓங்கியிருந்ததற்கான கீழடித் தடயங்கள் கிடைத்த மண் இது.
* வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்டோரின் வீரத்தால் தியாகத்தில் சிவந்த மண் சிவகங்கை.
* மத்திய அரசால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிறது.
* அரசியலில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த ப.சிதம்பரத்தின் பாராட்டை முக்கியமானதாக கருதுகிறேன்.
* சிவகங்கை மாவட்டத்தில் 2.38 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெறுகின்றனர்.
* சிவகங்கையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.855 கோடி கடனுதவி தரப்பட்டுள்ளது.
* சிவகங்கையில் 8,450 மாணவிகளுக்கு புதுமை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
* சிவகங்கையில் 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு சிவகங்கையில் மட்டும் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
* சிவகங்கையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 12 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
* சிவகங்கையில் 33,000 குழந்தைகள் காலை உணவு திட்டத்தால் பயன் அடைகின்றனர்.
* சிவகங்கையில் 65 கோவில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது.
* 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தான் அமையும்.
* தற்போது அடிக்கல் நாட்டியுள்ள பணிகளை மீண்டும் வந்து திறந்து வைப்பேன்.
* பெண்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களை செய்லபடுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






