கொடைக்கானலில் 2-வது நாளாக நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர்

சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் முதலமைச்சருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
கொடைக்கானலில் 2-வது நாளாக நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர்
Published on

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 4 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.

நேற்று காலை நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள சாலையில் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கொடைக்கானலில் 2-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனோரஞ்சிதம் நீர்த்தேக்கத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். நடைபயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த முதலமைச்சருடன் பொதுமக்கள் கலந்துரையாடி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். சிறுமி முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட அவர் கைகுலுக்கி மகிழ்ந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com