

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் கடந்த 25-ந்தேதி கொடைக்கானலுக்கு வந்தார். கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று 3-வது நாளாக காலை மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்சத்திர ஏரியை சுற்றி சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.