என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறந்த அரசியல்வாதி நயினார் நாகேந்திரன்- முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து
- விமர்சனம் செய்யும் போது கூட பொறுமையாக, அமைதியாகத்தான் செய்வார்.
- யாருக்கும் எந்தவித கோபமும் வராத வகையில் நடந்து கொள்வார்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
எதிர்க்கட்சி வரிசையில் (நயினார் நாகேந்திரன்) இருந்தாலும் அவர் கோபமாக பேசி நான் பார்த்ததில்லை. விமர்சனம் செய்யும் போது கூட பொறுமையாக, அமைதியாகத்தான் செய்வார். வெளிநடப்பு செய்யும் போது கூட சிரித்துக்கொண்டே யாருக்கும் எந்தவித கோபமும் வராத வகையில் நடந்து கொள்வார். சிறந்த அரசியல்வாதியாக இருக்கக்கூடியவர்.
64 முடிந்து 65-வது வயதிலே அடியெடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய சார்பிலும் தி.மு.க. சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
Next Story






