

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான இன்று திருச்சி சென்றார்.
அப்போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு ஸ்பெஷல் வணக்கம், ஸ்பெஷல் நன்றி. என்னை தற்போது பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. என்பார்கள். தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளின்படிதான் அப்படி. தமிழ்நாட்டிற்கு திருச்சி எப்படி இதயம் மாதிரியோ, அதேபோல்தான் என் இதயத்திற்கு திருச்சி கிழக்கு மிக மிக நெருக்கம்தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகல. 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவங்க எல்லாம், 6 நாட்கள் கூட அமைதியா இருக்க முடியல. ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்திலேயே ஆரம்பிச்சிட்டாங்க. பாவம் கல்யாண வீட்டில் எல்லாம் பொழம்பிட்டு இருக்காங்க.
நான் சொன்னதெல்லாம் நடக்குமா? ஒன் பை ஒன் புழம்பல்ஸ்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.
த.வெ.க. ஆட்சி அமைத்ததும், புதிய ஆட்சிக்கு 6 மாதத்திற்கு எந்த தொந்தரவும் கொடுக்கமாட்டோம் என்று முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், ஆட்சி மீது அடுத்தடுத்து விமர்சனங்களை முன்வைத்தார்.