அரசின் நிதி நிலை குறித்து முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை

இக்கூட்டத்தில் அரசின் திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
அரசின் நிதி நிலை குறித்து முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை
Published on

தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி த.வெ.க. தலைவர் C.ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் பேசும் போது, அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில், அரசின் நிதி நிலை குறித்து முதலமைச்சர் C.ஜோசப் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில் முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் அரசின் திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com