சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

89,429 தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது.1,146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் மறு கட்டுமானம்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய துறையின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 79,094 அடுக்குமாடி குடியிருப்புகள், 89,429 தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது.

நீண்ட கால பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக சிதிலமடைந்த குடியிருப்புகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் 1,146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் மறு கட்டுமானம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com