தலைமைச் செயலக வளாகத்தில் பேட்டரி காரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய், தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தகவல் அறிந்து அவரை காண பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
தலைமைச் செயலக வளாகத்தில் பேட்டரி காரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் முதலமைச்சர் விஜய்
Published on

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து காலை தலைமைச் செயலகத்திற்கு வரும் முதலமைச்சர் மாலை 5 மணிக்கு மேல் பணிகளை முடித்து புறப்பட்டு செல்கிறார். இதற்கிடையே அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை என ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, தலைமைச் செயலகத்தில் 35-க்கும் மேற்பட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் திட்டமிட்டு இருந்தார்.

முதலமைச்சர் விஜய் ஆய்வு

இந்த நிலையில், தலைமைச் செயலக வளாகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேட்டரி காரில் சென்று சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டார். பேட்டரி காரில் பயணித்து கோட்டையை சுற்றிப்பார்த்த முதலமைச்சர் விஜய் அங்கு உள்ள பழைமையான தேவாலயத்திற்கும் சென்றார். மேலும் கட்டிடங்களையும் பார்த்து ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு சென்றும் ஆய்வில் ஈடுபட்டார். கோட்டை அருங்காட்சியகத்துக்கு சென்று பழமையான பொருட்களை பார்வையிட்டார்.

போலீசார் குவிப்பு

முதலமைச்சர் விஜய், தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தகவல் அறிந்து அவரை காண பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com