முதல்வருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் ஒரு சிறப்பு இருக்கிறது - பாஜக எம்எல்ஏ பீடிகை

பார்ப்பதற்கு இளமையாக இருக்கிறீர்கள் மூத்த உறுப்பினர் எனக்கூறுகிறீர்கள என எம்எல்ஏக்கள் கேட்கின்றனர்.
BJP MLA Bhojarajan
Published on

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் நிகழ்வுகள் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேசியபோது, நான் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் ஒரு சிறப்பு உள்ளது என பீடிகையாக தெரிவித்தார்.

அவையின் மூத்த உறுப்பினர் என்பதால் முதல்வருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து கூறுவது சிறப்பு என்று கூறினார்.

சபாநாயகர்: பார்ப்பதற்கு இளமையாக இருக்கிறீர்கள் மூத்த உறுப்பினர் எனக்கூறுகிறீர்கள் என எம்எல்ஏக்கள் கேட்கின்றனர்.

பாஜக எம்எல்ஏ போஜராஜன்: எனது பிறந்த வயது தான் 79 ஆனால் எனது ஆன்மீக மனம் இன்னும் இளமையாக உள்ளது என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com