உலகம் முழுவதும் பின்பற்றப்படும் நேரமுறையை மாற்றி அமைக்க துடிக்கிறது பா.ஜ.க..!- கனிமொழி எம்.பி கண்டனம்

தற்போது காலத்தை கூட சமஸ்கிருத கண்ணோட்டத்தில் மாற்ற பாஜக முயற்சிக்கிறது.
உலகம் முழுவதும் பின்பற்றப்படும் நேரமுறையை மாற்றி அமைக்க துடிக்கிறது பா.ஜ.க..!- கனிமொழி எம்.பி கண்டனம்
Published on

கிரீன்விச் மெரிடியன் நேர முறையை மகாகல் ஸ்டாண்டர்ட் டைம் என மாற்ற வேண்டியநேரம் வந்துவிட்டதாக தர்மேந்திர பிரதான் கூறினார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்பி கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது-

உலகம் முழுவதும் பின்பற்றப்படும் நேரமுறையை மாற்றி அமைக்க பாஜக விரும்புகிறது.

தற்போது காலத்தை கூட சமஸ்கிருத கண்ணோட்டத்தில் மாற்ற பாஜக முயற்சிக்கிறது.

வேலைவாய்ப்பு-கல்வி வரை அனைத்தும் அறிவியலுக்கு புறம்பான, பிற்போக்குத்தனமா, சமஸ்கிருத கண்ணோட்டத்தில் திணிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com