TN Elections 2026 | தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு... ஆனால் ஒரு டுவிஸ்ட்..!

வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும்.
TN Elections 2026 | தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு... ஆனால் ஒரு டுவிஸ்ட்..!
Published on

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 28 தொகுதிகள் எவை என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனிடையே, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் 16 தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் மீதமுள்ள 12 தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் விவரம்:-

பொன்னேரி (தனி), வேளச்சேரி, சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), ஈரோடு கிழக்கு, உதகை, மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், காங்கிரஸ் வெற்றி பெற்ற 18 தொகுதிகளில் 16 தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். தென்காசி, விருத்தாசலம் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்காக விட்டு கொடுத்துள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com