தேர்வெழுதிய மாணவச் செல்வங்களுக்கும், உந்துசக்தியாக இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள் - அன்பில் மகேஷ்

இது 'Result' தான், இதுவே ‘life' கிடையாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர்ந்து இந்நாளை கடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

தேர்வெழுதிய மாணவச் செல்வங்களுக்கும், உந்துசக்தியாக இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள் - அன்பில் மகேஷ்
Published on

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. இதையொட்டி முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

தேர்வெழுதிய மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இது 'Result' தான், இதுவே ‘life' கிடையாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர்ந்து இந்நாளை கடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

நமது கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், 2025-26 கல்வியாண்டில் நாம் மேற்கொண்ட சீரிய பணிகளால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் சாதனை படைக்கும் என நம்புகின்றோம். மாணவச் செல்வங்கள் தங்கள் முடிவுகளை http://tnresults.nic.in மற்றும் http://dge.tn.gov.in இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com