த.வெ.க.-வில் இணைந்த 3 அ.தி.மு.க எம்எல்ஏக்கள்..! பதவியை ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சந்திப்பு

நாம் இனி ஒரே குடும்பமாக பயணிப்போம் என ஆதவ் அர்ஜூனா உறுதி அளித்துள்ளார்.
த.வெ.க.-வில் இணைந்த 3 அ.தி.மு.க எம்எல்ஏக்கள்..! பதவியை ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சந்திப்பு
Published on

மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமையில் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

அதன்படி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.

இதனால், அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 44-ஆக குறைந்தது.

ராஜினாமா செய்த 3 பேரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் சிலர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தகையோடு மரகதம் குமரவேல், செயக்குமார், சத்யபாமா ஆகிய 3 பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நேரில் சந்தித்தனர்.

ராஜினாமா செய்த 3 பேரையும் பொன்னாடை போர்த்தி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வரவேற்றார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்த 15 நாளில் அம்மாவின் ஆட்சியை பார்க்கிறோம் என ஆதவ் அர்ஜூனாவிடம் சத்யபாமா நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

முதல்வர் விஜயை நம்பி வந்திருக்கிறீர்கள் இனி நல்லதே நடக்கும், நாம் இனி ஒரே குடும்பமாக பயணிப்போம் என ஆதவ் அர்ஜூனா உறுதி அளித்துள்ளார்.

ராஜினாமா செய்த 3 பேரும் இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் விஜயை சந்திக்க உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com