

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி தோல்வியடைந்து மூன்றாவது இடத்திற்கு சென்றது.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்.பி. வேலுமணி தலைமையில் உள்ள 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க அரசுக்கு ஆதராவாக செயல்பட்டனர்.
இதன் காரணமாக இவர்கள் அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர்களுக்கு மீண்டும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி,
அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர்கள் - எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன்,
தலைமை நிலையச் செயலாளர் - வரகூர் அருணாச்சலம்,
அமைப்பு செயலாளர்கள் - தங்கமணி, கே.சி.கருப்பணன், எஸ்.பி.சண்முகநாதன், அன்பழகன், காமராஜ், வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி, திருத்தணி கோ.அரி மற்றும் மருதராஜா,
கொள்கை பரப்பு இணைச் செயலாளர்கள் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணிகண்டன், அருண்மொழிதேவன் மற்றும் மகேந்திரன்,
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட்ட செயலாளர் - ஏ.எல்.ராமு,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் - ஞான கலைச்செல்வம்,
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் - டி.என்.சிவக்குமார்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் - Ex கொறடா மனோகரன்,
கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் - பொள்ளாச்சி ஜெயராமன்,
கோவை புறநகர் மத்திய மாவட்ட செயலாளர் - செ.ம.வேலுசாமி,
திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் - வேல்குமார் சாமிநாதன்,
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் - செல்வகுமார்,
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் - சிவசாமி
உள்ளிட்டோர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நியமனம் செய்தார்.