வாக்கு எண்ணிக்கை முடியும்வரை கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டடன.
வாக்கு எண்ணிக்கை முடியும்வரை கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
Published on

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23-ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

இதற்கிடையே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டடன. இதில் கலவையான முடிவுகள் வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், அ.தி.மு.க. கணிசமான இடங்களை பெறும் என்றும், த.வெ.க.வுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திமுக மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களும் பங்கேற்றனர்.

அப்போது, திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படும் வரை, ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

எந்தவித குளறுபடியும் நடந்துவிடக் கூடாது. நம்முடைய பார்வையில் இருந்து எந்த ஒரு விஷயமும் தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com