வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமராக்களை குறைக்கக்கூடாது - அதிமுக வலியுறுத்தல்

அனைத்து சாவடிகளிலும் தேவையான சிசிடிவிகள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமராக்களை குறைக்கக்கூடாது - அதிமுக வலியுறுத்தல்
Published on

அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி உள்ள அவசர மனுவில் கூறியிருப்பதாவது:-

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் கேமரா பொருத்தப்படுகிறது. சில மாவட்டங்களில் இந்த கேமராக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சி நடப்பதாக தெரிகிறது.

இதன் மூலம் வாக்குச்சாவடி கைப்பற்றல், கள்ள ஒட்டு போடுதல் உள்ளிட்ட தவறுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட கேமராக்கள் குறையாத வண்ணம் அதிரடி ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com