

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி!
சிவகங்கை மாவட்டம், கல்லல் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்ததற்காக, காவல் உதவி ஆய்வாளர் திரு. துரைசிங்கம் அவர்களை, திமுக பிரமுகர் அடைக்கலராஜ் என்பவர் காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து கொடூரமாகத் தாக்கி அவரது கையை உடைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
காவல் நிலையத்திலேயே காவல்துறைக்குப் பாதுகாப்பு இல்லாத இந்த அவல நிலையே, தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதற்குச் சான்றாகும்.
எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதோடு, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராமல் இருக்க முதல்வர் விஜய் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.