‘அமைச்சர் பெரியகருப்பன் தோல்வியடைந்தது தொடர்பாக வழக்கு தொடரப்படும்’ - உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பெரியகருப்பன் தோல்வியடைந்தது தொடர்பாக வழக்குத் தொடரப்படும் என உதயநிதி தெரிவிப்பு.
‘அமைச்சர் பெரியகருப்பன் தோல்வியடைந்தது தொடர்பாக வழக்கு தொடரப்படும்’ - உதயநிதி ஸ்டாலின்
Published on

தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிப் பெற்றது. தனிப்பெரும்பான்மை இல்லையென்றாலும், சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயன்று வருகிறது.

திமுக 59 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. பல்வேறு தொகுதிகளில் தவெகவிடம், திமுக தோல்வியை சந்தித்தது. அந்தவரிசையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியிலும் தவெக வேட்பாளரிடம், திமுக வேட்பாளரான அமைச்சர் பெரியகருப்பன் தோல்வியை தழுவினார்.

அதுவும் ஒரு வாக்கு வித்தியாசத்தில். இது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்.

தி.மு.க. பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெரியகருப்பன் தோல்வியடைந்தது தொடர்பாக தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும்.” என தெரிவித்தார்.

தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும், பெரியகருப்பன் 83,374 வாக்குகள் பெற்றிருந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com