"வெற்றித் தலைவர் பாதையில் மக்களுக்கான பயணம்..." சி.விஜயபாஸ்கர் நெகிழ்ச்சிப் பதிவு!

முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!
C Vijayabaskar- TN CM Vijay
Published on

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சமீபத்தில் தவெகவில் இணைந்ததை தொடர்ந்து இன்று முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து விஜயபாஸ்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

இதுகுறித்த பதிவில் கூறியிருப்பதாவது:-

வரலாறு எழுத பலர் வருவார்கள்…

வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!

தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை

மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து,

புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!

வெற்றித் தலைவர் பாதையில்…

மக்களுக்கான பயணம்…

அதே உறுதியோடு தொடரும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com