சுயலாபத்திற்காக அல்ல.. சுயமரியாதைக்காக எடுத்த முடிவு..!- அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கூட்டாக பேட்டி

தவெகவில் இணைந்தது ஏன்? என முன்னாள் எம்எல்ஏக்கள் கூட்டாக விளக்கம் அளித்துள்ளனர்.
சுயலாபத்திற்காக அல்ல.. சுயமரியாதைக்காக எடுத்த முடிவு..!- அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கூட்டாக பேட்டி
Published on

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 3 முன்னாள் எம்எல்ஏக்கள் பனையூரில் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

எங்களுடைய தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

எங்கள் சுய நலத்திற்காக இந்த முடிவை எடுக்கவில்லை.

சுயமரியாதைக்காகவும், தொகுதி மக்களின் நலனிற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள். ஆனால் அந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக எங்களுடைய எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்போதும் ஆட்சி அமைக்கும்பொழுது முதல் கையெழுத்தை பெண்களுக்கான பாதுகாப்புடன் முன்னெடுப்பார்.

அதேபோல் இப்போதைய முதலமைச்சர் விஜய்யும் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

அவர் பதவியேற்று 15 நாட்கள் கூட ஆகவில்லை பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறார்.

மக்கள் அனைவரும் அவரிடம் நிறைய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்; முதலமைச்சர் விஜய் நல்லாட்சி கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com