புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை- தமிழக அரசு

அனைத்து கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 

அனைத்து கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜன 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உணவகம் மட்டும் வழக்கம்போல் செயல்படும். 

புத்தாண்டு கொண்டாட்டங்களில் அதிக அளவில் மக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால் கொரோனா அதிகரிக்கக்கூடும் என கருதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சில வெளிநாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் சூழலில் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com