வைத்தீஸ்வரன்கோவிலில் கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்தி தெருமுனை பிரசாரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி தெருமுனை பிரசார நிகழ்ச்சி நடந்தது.
கொரோனா தடுப்பூசி பிரசாரம்
கொரோனா தடுப்பூசி பிரசாரம்
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி தெருமுனை பிரசார நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியின் செயல் அலுவலர் குகன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியையொட்டி இளநிலை உதவியாளர் பாமா தலைமையில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை செய்தனர். வரிதண்டலர் அமுதா தலைமையில் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஊசி மற்றும் தடுப்பூசி மருந்து குப்பி, பிரத்யேக பிரசார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றை டிரைவர் மணிவண்ணன், மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வடிவமைத்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com