அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி மருத்துவக்குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் பரிசோதனை
Published on

சென்னை:

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களில் சிலருக்கும், பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியநிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியான கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் விடுதியில் 2 பேருக்கு காய்ச்சல் இருந்ததாக நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த 2 மாணவர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும், அந்த பரிசோதனை முடிவு வந்த பிறகே அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா? என்பது தெரியவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து விடுதியில் இருந்த மாணவர்கள் அனைவரும் தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி மருத்துவக்குழுவினர் கொரோனா பரிசோதனை செய்கின்றனர்.

2 மாணவர்களுக்கு அறிகுறிகள் இருந்ததால் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com