முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு

பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை பொறுப்பை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சந்திப்பானது நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு
Published on

சென்னை:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொன்முடி சந்தித்து பேசி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சந்திப்பானது நடைபெற்று வருகிறது.

சந்திப்பின் போது வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறலாம் என கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com