search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்று 2-வது நாளாக சரிவு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்தது
    X

    இன்று 2-வது நாளாக சரிவு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்தது

    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.74 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்கிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்தில் கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது.

    இதன் காரணமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 505-க்கு விற்றது.

    இதற்கிடையே நேற்று தங்கம் விலை குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.43 ஆயிரத்து 520-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று 2-வது நாளாக குறைந்தது. இதனால் தங்கம் பவுன் ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42 ஆயிரத்து 680-க்கு விற்றது. ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.5 ஆயிரத்துக்கு 335 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.74 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்கிறது.

    தங்கம் பவுன் 2 நாட்களில் ரூ.1,360 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்ததால் வரும் நாட்களில் மேலும் விலை உயரலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தொடர்ந்து விலை குறைந்துள்ளது ஏழை, நடுத்தர மக்களுக்கு ஆறுத லாக அமைந்துள்ளது.

    Next Story
    ×