என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அருகே அதிகநேரம் இருப்பதை தவிர்த்த எடப்பாடி பழனிசாமி
- தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியின் இருக்கை அருகே ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை அமைந்துள்ளது.
- சபாநாயகர் இதில் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.
சென்னை:
தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியின் இருக்கை அருகே ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை அமைந்துள்ளது. தற்போது அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டுள்ளதால், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனாலும், சபாநாயகர் இதில் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.
இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்படாமல் எடப்பாடி பழனிசாமியின் இருக்கை அருகேதான் உள்ளது. இருவரும் அருகருகே இருந்தாலும் பேசிக் கொள்வதில்லை. இன்று காலையில் சட்டசபையில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இது நடைபெற்ற காரணத்தால் ஓ.பன்னீர்செல்வத்தின் அருகே அமருவதை தவிர்ப்பதற்காக சட்டசபை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திலேயே சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி இருந்தார். கேள்வி நேரம் முடிந்த பிறகுதான் அவர் சட்டசபைக்குள் வந்தார்.






