தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.1 கிலோ பார் வெள்ளி ரூ.76,400-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
Published on

சென்னை:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வருகிறது.

தங்கம் விலை நேற்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு அதிகரித்து 76 ரூபாய் 40 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.76,400-க்கு விற்பனையாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com