ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தங்கம் விலை...

தங்கம் விலை இன்று குறைந்தது.ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்கப்படுகிறது.
ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தங்கம் விலை...
Published on

சென்னை:

தங்கம் விலை கடந்த 9-ந் தேதி பவுனுக்கு ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் ஏற்றம் காணப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று தங்கம் பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது.

நேற்று பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.48 ஆயிரத்து 40-க்கு விற்றது. சுமார் 2½ ஆண்டுக்கு பிறகு மீண்டும் பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. இதனால் பவுன் ரூ.43 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42 ஆயிரத்துக்கு 760-க்கு விற்றது.

கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ. 5 ஆயிரத்து 345 ஆக உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.74 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com