நாயை தரையில் அடித்து கொன்ற வாலிபர் கைது

பொதுமக்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.கொலை செய்யப்பட்ட நாயின் உடல் பிரேத பரிசோனைக்கு பின் புதைக்கப்பட்டது.
நாயை தரையில் அடித்து கொன்ற வாலிபர் கைது
Published on

கம்பம்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் கிரண் (வயது26). இவர் தேங்காய் வெட்டும் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் சுற்றித்திரிந்த நாயை பிடித்து தரையில் அடித்து கொன்றுள்ளார்.

இதனை தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களையும் கத்தியை காட்டி மிரட்டி நான் ஏற்கனவே கொலை வழக்கில் உள்ளே சென்று வந்தவன் என மிரட்டி உள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில் கிரண் சிறைச்சாலையில் இருக்கும்போது அந்த நாய் அவரது தாயை கடித்ததாவும் இதனால் ஆத்திரத்தில் இருந்த தான் அந்ததெருநாயை தேடி பிடித்து அடித்து கொன்றதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட நாயின் உடல் பிரேத பரிசோனைக்கு பின் புதைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com