search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. வழக்கு: பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை- ஓ.பி.எஸ் தரப்பு வாதம்
    X

    அ.தி.மு.க. வழக்கு: பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை- ஓ.பி.எஸ் தரப்பு வாதம்

    • கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது; எந்த நோட்டீசும் அளிக்காமல் கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.
    • இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் கட்சி விதிகளுக்கு புறம்பானது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறுகையில்,

    கட்சியில் இருந்து நீக்கி, கட்சி கட்டமைப்பை மாற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டுள்ளன.

    பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட தடை விதிக்க வேண்டும்.

    கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது; எந்த நோட்டீசும் அளிக்காமல் கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர். கட்சியை விட்டு நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை.

    கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். பொதுக்குழுவை கூட்டியதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீக்கத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    கட்சி நிறுவனரின் கொள்கைக்கு விரோதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பங்கேற்க இயலாத நிலை உள்ளது.

    பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    அ.தி.மு.க. விதிப்படி, கட்சி கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம், பொதுக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

    பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதமானது.

    கட்சி அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை தலைமை விரும்பியதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை.

    இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் கட்சி விதிகளுக்கு புறம்பானது.

    இவ்வாறு ஓ.பி.எஸ். தரப்பில் வாதம் நடைபெற்று வருகிறது.

    எதிர்மனுதாரர்கள் தரப்பின் விளக்கத்தை கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×