

புதுச்சேரிக்கு வரும் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், தவெக தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்க இருக்கிறார்.
திறந்த வாகனத்தில் நின்றபடி விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
புதுச்சேரி மக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் வழிநெடுகிலும் சாலையோரங்களில் நின்று விஜய்க்கு மலர் தூவி வரவேற்றனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் விஜய் பேசியதாவது:-
புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் வணக்கம். தவெக மற்றும் 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி போட்டியிடுகிறது.
முதன்முதலாக புதுச்சேரியில் களம் காணும் தவெக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
புதுச்சேரியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களியுங்கள். தவெகவுடன் சேர்ந்து உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடியில் நேயம் மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் திமுக- காங்கிரசின் கூட்டணி குழம்பிபோன கூட்டணியாக உள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணியும் சேர்ந்து இருக்க முடியாத நிலையில் சோர்ந்து போன கூட்டணியாக உள்ளது.
கூட்டணி என்று கூறிவிட்டு சில தொகுதிகளில் திமுகவும் காங்கிரசும் எதிர்த்து நிற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.