மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்துள்ளோம்- லீமா ரோஸ்

எனது மகன் எம்எல்ஏவானது சந்தோஷம். அவர் அமைச்சராவது பற்றி சொல்வார்கள்.
மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்துள்ளோம்- லீமா ரோஸ்
Published on

புதுவை சட்டமன்றத்தில் நடந்த எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ் மார்டின் தாயாரும், திருச்சி லால்குடி அதிமுக எம்எல்ஏவுமான லீமா ரோஸ் கேலரியில் அமர்ந்து பார்த்தார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தார். பின்பு நிருபர்களிடம் லீமா ரோஸ் கூறியதாவது:-

எனது மகன் எம்எல்ஏவானது சந்தோஷம். அவர் அமைச்சராவது பற்றி சொல்வார்கள். மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்துள்ளோம்.

நான் அமைச்சராவது இறைவன் சித்தம்தான். தவெக அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் கோரியுள்ளதாக தவறாக யூடியூப்பில் போடுகிறார்கள். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவதூறாக பேசுவோர் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் உள்ளோம் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com