தேர்வில் வெற்றி பெற்ற பிளஸ் 2 மாணவர்களுக்கு கவர்னர் வாழ்த்து

தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் மனம் தளராமல் முயற்சி செய்து, வரும் தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
தேர்வில் வெற்றி பெற்ற பிளஸ் 2 மாணவர்களுக்கு கவர்னர் வாழ்த்து
Published on

புதுவை கவர்னர் கைலாஷ்நாதன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

புதுவை மாநிலத்தில், மேல்நிலை பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வு முடிவுகளின் அடிப்படையில், புதுச்சேரி 98.65 விழுக்காடு மற்றும் காரைக்கால் மாவட்டம் 97.67 விழுக்காடு தேர்ச்சி விகிதம் பெற்று இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முறை தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் மனம் தளராமல் முயற்சி செய்து, வரும் தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com