

புதுவையில் அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்.,
மத்திய அரசு, மாணவர் சமுதாயத்திலே பல்வேறு குழப்பங்களை உருவாக்கி நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. பல குளறுபடிகளை செய்து சிபிஎஸ்இ தேர்வு முறையை குழப்பி உள்ளனர்.
சிபிஎஸ்சி நிர்வாக முறையே தற்போது மத்திய அரசு மாற்றி உள்ளது. இதன் மூலம் குளறுபடிகளை மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது. நீட் தேர்வில் எப்போதும் குளறுபடிகள் தொடர்கிறது.
இந்த குளறுபடிகளை மாணவர்களே கண்டுபிடித்து வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் பிரதமர் இதற்கான எந்த ஒரு காரணத்தையும் சொல்லவில்லை.
புதுவை அரசு பின்பற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்நிலைப் பள்ளியில் மூன்றாவது மொழியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
புதுவை மானவர்களின் விருப்ப மொழியாக இருந்த பிரெஞ்சு தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை முதல் அமைச்சர் ரங்கசாமி கண்டு கொள்ளவில்லை. இதனை கண்டிக்கும் மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. இதனை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
மத்திய மந்திரி முருகன் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுவைக்கு 15,000 கோடி தந்துள்ளோம் எனக்கூறி உள்ளார். ஆனாலும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக ரங்கசாமி, மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறி வருகிறார்.
மத்திய அரசு தந்த ஒரு 15 ஆயிரம் கோடி எதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை முதலமைச்சர் ரங்கசாமி விளக்க வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமியின் சர்வாதிகாரப் போக்கிற்கு அமைச்சரவையோ, சட்டமன்றமோ தேவையில்லை. அவர் ஒருவர் மட்டுமே அரசு நிர்வாகத்தை நடத்துவார்.
புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். இடைத்தேர்தலில் நட்பு போட்டிக்கு வாய்ப்பில்லை. விஜய் கட்சியான தவெகவை திமுக குறைவாக மதிப்பீட்டுவது தான் தோல்விக்கு காரணம்.
நாங்கள் நட்பு ரீதியாக போட்டியிட்ட தொகுதிகளில் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதியில் இனி நான் போட்டியிட மாட்டேன். புதுவையில் கூட்டணிக்கு திமுகதான் தலைமை தாங்கியது.
அதனால் தோல்விக்கு திமுகவே காரணம். கூட்டணி தலைமையை திமுகவே எடுத்து கொண்டது. கூட்டணி கட்சிகளிடம் தன்னிச்சையாக திமுக பேச்சுவார்த்தை நடத்தியது.” என தெரிவித்தார்.