

இந்தியாவின் முப்படைகளின் திறனை மேம்படுத்தும் வகையில் 52,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் நவீன ஆயுதங்கள் கொள்முதல் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொள்முதல்
எதிரிகளின் டிரோன் தாக்குதல்களை முறியடிக்கும் ஆகாஷ் தரங் என்ற அதிநவீன மின்னணு டிரோன் தடுப்பு அமைப்பு,
வீரர்கள் எளிதில் தூக்கிச் சென்று தாக்கும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு,
பீரங்கிகளை, தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் ஆக்டிவ் புரொடெக்ஷன் சிஸ்டம்,
கடற்படைக்கு, கடலில் எதிரி கப்பல்களைக் கண்டறியும் Multi Influence Ground Mine தொழில்நுட்பம்,
விமானப்படைக்கு, மிக அதிக உயரத்தில் நீண்ட நேரம் வானில் பறந்து கொண்டே இருக்கும் நிலையான இறக்கைகள் கொண்ட சூடோ சாட்டிலைட் அமைப்பு ஆகியவை கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிர்ஆர்டிஓ மற்றும் உள்நாட்டு ஆயுத தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து இவை கொள்முதல் செய்யப்பட உள்ளன.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்கள் முப்படைகளிலும் சேர்க்கப்படுவதன் மூலம், எதிர்காலத்தில் வரவிருக்கும் எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் இந்தியா முன்னெப்போதையும் விட மிக வலிமையுடன் எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.