என் மலர்tooltip icon

    இந்தியா

    SIR: தோல்வி பயம் இருக்கும் இடங்களில் தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து வாக்குகளை திருடும் பாஜக - ராகுல்
    X

    SIR: தோல்வி பயம் இருக்கும் இடங்களில் தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து வாக்குகளை திருடும் பாஜக - ராகுல்

    • குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் காங்கிரஸ் ஆதரவு வாக்குச் சாவடிகளின் வாக்குகள் தேடித் தேடி நீக்கப்பட்டுள்ளன.
    • இதன் மூலம் மக்கள் அல்ல, மாறாக யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதை பாஜகவே தீர்மானிக்கிறது.

    பீகாரை தொடர்ந்து தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், குஜராத் உட்பட 10 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) நடைபெற்று வருகிறது.

    இதில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையானது திட்டமிட்டு வாக்குகளைத் திருடும் கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "எங்கெல்லாம் SIR நடக்கிறதோ, அங்கெல்லாம் வாக்குத் திருட்டு நடக்கிறது.

    குறிப்பாக குஜராத்தில் SIR என்ற பெயரில் செய்யப்படுபவை எவ்விதமான நிர்வாக நடைமுறையும் அல்ல. இது திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வியூகத்துடன் செய்யப்படும் வாக்குத் திருட்டு.

    மிகவும் அதிர்ச்சிகரமான மற்றும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஒரே ஒரு பெயரில் ஆயிரக்கணக்கான ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றும் காங்கிரஸ் ஆதரவு வாக்குச் சாவடிகளின் வாக்குகள் தேடித் தேடி நீக்கப்பட்டுள்ளன.

    எங்கெல்லாம் பாஜகவிற்குத் தோல்வி பயம் தெரிகிறதோ, அங்கெல்லாம் வாக்காளர்களையே அமைப்பிலிருந்து மறைந்து போகச் செய்கிறார்கள்.

    இதே போன்ற ஒரு முறைதான் ஆலந்திலும், ராஜூராவிலும் நடந்தது. இப்போது அதே Blueprint குஜராத், ராஜஸ்தான் மற்றும் SIR திணிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அமல்படுத்தப்படுகிறது.

    ஒரு நபர், ஒரு வாக்கு என்ற அரசியலமைப்பு உரிமையை அழிப்பதற்கான ஆயுதமாக SIR மாற்றப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மக்கள் அல்ல, மாறாக யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதை பாஜகவே தீர்மானிக்கிறது.

    மற்றும் மிகக் கசப்பான உண்மை என்னவென்றால், தேர்தல் ஆணையம் இப்போது ஜனநாயகத்தின் காவலனாக இல்லை, மாறாக இந்த வாக்குத் திருட்டுச் சதியின் முக்கியப் பங்காளியாக மாறிவிட்டது." என்று சாடியுள்ளார்.

    Next Story
    ×